கடந்த இருபது நாட்களாக Jurassic Park 3D படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நேற்று தான் பார்க்க நேர்ந்தது. அதுவும் Oblivion வெளியான காரணத்தினால் IMAX இல் பார்க்கலாம் என்ற ஆசை தகர்ந்து சாதாரண திரையரங்கில் தான் பார்த்தேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போதும், வந்து படுக்கையில் கிடந்திருந்த போதும் எண்ணம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. இருபது ஆண்டுகளுக்கு முன் 1993 - 94 இல் வாசு ஏ/சி யில் இந்தப் படம் வெளியான போது நான் சிறியமலர் மேனிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். Science Fiction என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மதியக் காட்சிக்கான டிக்கெட்களை வாசு திரையரங்கம் விற்றுக் கொண்டிருந்தது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் அன்று Science Fiction என்றாலும் எங்களுக்கு என்னவென்று தெரியாது டைனோசர் என்றாலும் என்னவென்று தெரியாது. படத்தின் சுவரொட்டிகளைப் பார்த்து டைனோசர் அப்படித்தான் இருக்கும் என்று என்னைப் போன்ற ஒரு சிலருக்கு எண்ணமிருந்தாலும் , பெரிய காண்டாமிருகம் போலிருக்கும் என்று சொல்லித்தான் பலரை படத்துக்கே அழைத்துச் சென்றனர்.
ஒட்டுமொத்த பள்ளியே அந்தப் படத்திற்குப் போனாலும் , நான் அந்தப் படத்திற்கு வீட்ல அனுமதி வாங்கறதுக்குள்ள கிட்டத்தட்ட செத்துப்போயிட்டேன். படம் பார்த்தால் பையன் கெட்டுப் போயிடுவான், கையில காசு கொடுத்தா பையன் கெட்டுப் போயிடுவான் போன்ற பலப்பல புரிதல்கள் எங்க அப்பாவுக்கு உண்டு. Steven Spielberg இன் இன்னொரு படமான ET படத்துக்கு எங்கள் வீட்டின் அருகிலுள்ள நண்பர்கள் அழைக்க, அந்த நண்பர்களின் அம்மாக்கள் என் அம்மாவிடம் எடுத்துச் சொல்லியும், என்னால் போக முடியவில்லை. அதற்கு என் அம்மா என் அப்பா சொன்னக் காரணமாக மற்றவர்களிடம் கூறியது "அந்தப் படத்துக்கு கூட்டம் அதிகமா இருக்காம், வாசக்கதவு வரைக்கும் சைக்கிள் நிக்குதாம், இங்கிலீஷ் படம் அசிங்கமான படமா இல்லாட்டி இவ்வளவு கூட்டம் நம்மவூருல ஏன் வருதுன்னு" . எனக்கு இதைக் கேட்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை , பசங்க வீட்டுக்குத் தெரியாம படத்துக்குப் போறது அன்றைய காலகட்டத்தில் பெரிய கெட்டப்பழக்கம், அதற்கான காரணம் இந்த மாதிரி தவறான புரிதல்களே என்ற புரிதல் அன்று வந்தது. அப்புறம் என்னோட கடைசி சித்தப்பா , Jurassic Park நல்ல படம்தான், ஏதோ விலங்கை வச்சு எடுத்திருக்கனாம் என்று சொன்னவுடன் காசு கொடுத்தார்கள். நானும் படத்துக்குப் போனேன். என்னுடைய 23 ஆம் வயது வரை நான் பார்த்த ஒரே ஆங்கில / வெளிநாட்டுப் படம் அது தான்.
2006 இல் ஆனந்த விகடனில் திரு.செழியன் எழுதிய "உலக சினிமா" தொடரை படிக்க ஆரம்பித்ததும் வெளிநாடுகளின் திரைப்படங்களின் மீதான ஒரு பார்வையும் உணர்வும் ஏற்பட்டது. அத் தொடரில் வெளியான "Children of Heaven" என்ற ஈரானியப் படத்தைப் பற்றி படித்தேன். மணி கூறியப் பிறகு பர்மா பஜார் சென்று அந்தத் திரைப்படத்தை வாங்கி வந்தேன். திரைப்படங்களின் மீதான என்னுடைய கண்ணோட்டம் மாறுவதற்கு காரணமான முதல் படம் "Children of Heaven" . எங்களுடன் கல்லூரியில் படித்த, மணியின் நெருங்கிய நண்பனான சதீஷ் சொன்னதற்காக "Malena" (“Cinema Paradiso” படத்தினை இயக்கிய Giuseppe Tornatore இயக்கிய மற்றொரு படம்) படத்தைப் பார்த்தேன். நம்ம வூரு நடிகைகள் சொல்லும் "படத்துக்குத் தேவையான கவர்ச்சி" என்று விடும் பீலாவின் உண்மையான பொருள் அந்தப் படத்திலிருந்து தான் புரிந்து கொண்டேன். இந்த இருபடங்களும் தான் என்னுடைய உலக சினிமா காதலுக்கு Launch Pad ஆக அமைந்தது.
நான் வேலைக்குச் சேர்ந்து இரு ஆண்டுகளில் அமெரிக்கா வரவேண்டிய காலகட்டமும் இதுவே. அமெரிக்கா வந்த பிறகு , விகாஸ் சிங், விகாஸ் போன்றவர்களின் நட்பால் வெளிநாட்டுத் திரைப்படங்களை தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். Netflix மிகப் பெரும் உதவியாக இருந்தது. இதே காலகட்டத்தில் "சிறிது வெளிச்சம்" என்ற பெயரில் திரு. எஸ். ரா அவர்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுத; பிரபலமில்லாத ஆனால் மிகச் சிறந்த உலகத் திரைப்படங்கள் அறிமுகமாயின.
உலகத் திரைப்படங்களின் காதலானாகவும், அதனைத் தேடித் தேடிச் சுவைக்கும் மனப்பான்மையும் கடந்த ஏழு ஆண்டுகளின் என்னுள் தீவிரமாக வளர்ந்துவிட்டாலும், 1993-1994இல் Jurassic Park படத்திற்கு போராடி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து சென்றது உள்ளுக்குள் ஒரு நகைப்பை ஏற்படுத்தவே செய்கிறது.